Saturday, August 21, 2010

மாற்றுக்கருத்தினை ஆதரிப்பீர்


உலக அளவிலும் நமது நாட்டிலும் எழுத்து, காட்சி ஊடகங்கள் அசுர தனமாக வளர்ந்துள்ளன. அனால் அவை சமூகத்தின் மிகப்பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் செய்திகளையோ, உழைக்கும் மக்களுக்கான செய்திகளையோ அவை கொண்டிருக்கும் முதலாளி வர்க்க சார்பின் காரணமாக வெளிக்கொணர்வதில்லை. உழைக்கும் மக்களின் நலனுக்கான கருத்துக்களையும் பெருமளவு இரட்டிப்பு செய்கின்றன.

உழைக்கும் மக்கள் அவர்களது எரியும் பிரச்சனைகளுக்கான அடிப்படைக்காரணம் ஆளும் முதலாளி வர்க்கமே என்பதை அறிந்து கொண்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களது கவனத்தை திசை திருப்பும் வகையிலையே அவை தங்களது நிகழ்ச்சிகளை வடிவமைத்து வழங்குகின்றன.

உழைக்கும் வர்க்க நலன் பேணும் அமைப்புகள் என்று தங்களை காட்டி கொள்பவையும் வர்க்க போராட்டபாதையை கைவிட்டு விட்டு ஒருபுறம் அப்பட்டமான நாடாளமன்றவாத அரசியலிலும் மறுபுறம் ஆளும் முதலாளி வர்க்கத்தை தெரிந்தோ, தெரியாமலோ மூடி மறைத்து காக்கும் தேசியவாத, ஜாதியவாத அரசியல் போக்குகளில் மூழ்கி போய்யுள்ளன. அந்த பிண்ணனியில் அவற்றின் ஊடகங்களும் உழைக்கும் வர்க்க செய்திகளையும், கருத்துக்களையும், திருபுகளின்றி முன்வைப்பதில்லை.


உழைக்கும் வர்க்க அரசியல் ஆளும் முதலாளி வர்க்க அரசியலிலிருந்து மாறுபட்டது மட்டுமல்ல, அந்த அரசியலிருந்து நேர் எதிரானதும் ஆகும். அந்த அடிப்படையில் எந்த வகை சமரசமும் இன்றி வர்க்கப் போராட்டப் பாதையையும் , பாட்டாளி வர்க்க சர்வதேச அணுகுமுறையையும் கடைபிடித்து உழைக்கும் வர்க்க நலன் ஒன்றையே முழுக்க முழுக்க மனதில் கொண்டு முதலாளி வர்க்க அரசியலுக்கு எதிரான கருத்துக்கள் அனைத்தையும் தாங்கி வரும் மாற்றுக்கருத்து இதழுக்கு சந்தா செலுத்தி உழைக்கும் வர்க்கத்தின் குரல் உரத்து ஒழிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தனி இதழ் : ரூ.10/-
ஒரு வருட சந்தா : ரூ.75/-
(அஞ்சல் செலவு உட்பட)

சந்தா விபரங்களுக்கு தொடர்ப்பு கொள்ள :-
மாற்றுக்கருத்து இரு மாத இதழ்,
3/112, திலகர் தெரு, பேங்க் காலனி,
நாராயண புறம், மதுரை -625 014.
மதுரை : T. சிவக்குமார் – செல்பேசி: 94430 80634
சென்னை : K. கதிரேசன் – செல்பேசி: 98434 64246



No comments:

Post a Comment